கோவா திரைப்பட விழா ; ரஜினிக்குச் சிறப்பு விருது: அறிவித்த மத்திய அரசு

0
256

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து, ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. சா்வதேச தரத்திலான இந்தத் திரைப்பட விழாவில், உலகம் முழுவதிலும் இருந்து திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். வரும் நவம்பா் 20-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கோவாவில் நடக்கவுள்ள இந்த விழாவிற்கு, இது 50-ஆவது ஆண்டு என்கிற சிறப்பு அம்சமும் உள்ளது. 

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  தெரிவித்ததாவது: 

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படுகிறது. விருது குறித்து ரஜினிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here