கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வியாழக்கிழமை அறிவித்தது.

கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கோவா சட்டப்பேரவையின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வியாழக்கிழமை அறிவித்தது. கோவா மாநில முதல்வர்  பிரமோத் சாவந்த், சங்கேலிம் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர் மார்கோ தொகுதியில் போட்டியிடுகிறார்.

எஞ்சிய 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here