திமுக தலைவர் ஸ்டாலின், கோலம் போடுவது மூலம் தூய்மைப் பணி குறித்து யோசனை அளித்த மாநகராட்சி அலுவலரை பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று(ஞாயிறன்று) தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவில் கூறியதாவது:

கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்’ என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது!

இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! 

இவ்வாறு அவர் அந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here