உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் மேலும் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:“சமவாய்ப்பை மறுக்கும் நீட் தேர்வைத் தடுப்போம்”

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மூளையழற்சி, காய்ச்சல், ஒவ்வாமை உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆக.10 மற்றும் ஆக.11 ஆகிய இரண்டு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே.மிஸ்ரா உட்பட ஒன்பது பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம், 420, 308, 120B உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்: கேட்டு வாங்கித்தரும் விஜய், கெட்டாலும் கண்டுகொள்ளாத அஜித்

இந்நிலையில், மேலும், ஒரு துயரச் சம்பவமாக பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதில் ஏழு குழந்தைகள் மூளையழற்சியாலும், மற்ற குழந்தைகள் இதர காரணங்களாலும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆக.1ஆம் தேதி முதல் ஆக.28ஆம் தேதி வரை 290 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: மாதவிடாய் ரத்தப் போக்குக்குப் பள்ளிக்கூடம் கண்டனம்; தற்கொலை செய்துகொண்ட மாணவி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்