தமிழக அரசின் அனுமதியின்றி கோயில்களில் பார்க்கிங் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையை அடுத்த பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் மாயாண்டி என்பவர் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவில், உரிய ஒப்பந்தம் இல்லாமல் கோயில்களில் பார்க்கிங் கட்டணம் மற்றும் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமாகும். 

உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பார்க்கிக் கட்டணம் வசூலிக்க உரிய முறையில் ஒப்பந்தம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here