கோபப்படுத்திய ரசிகர்… குணமாக பதில் சொன்ன ப்ரியா ஆனந்த்

0
172


நீங்கள் நடிக்கிற படம் ஓடுவதில்லை, உங்க ராசி சரியில்லை என்று ஒரு நடிகையின் முகத்துக்கு நேராகச் சொன்னாலே நூறு டிகிரியில் கொதிப்பார்கள். அத்தனை கோபம் வரும். உங்க ராசியால் உங்களுடன் நடிப்பவர்கள் இறந்து போகிறார்கள் என்று சொன்னால் போலீஸில் புகார் தந்து உள்ளே தள்ளவிட மாட்டார்கள்? ஆனால், ப்ரியா ஆனந்த் கோபப்படாமல் ராசி ஜோசியம் சொன்ன ரசிகரை புரிய வைத்துள்ளார்.


ப்ரியா ஆனந்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர், அவரது ராசி குறித்து பதிவிட்டார். இங்கிலீஷ் விங்கிலீஷில் ஸ்ரீதேவியுடன் நடித்தீர்கள், அவர் இறந்துவிட்டார். எல்கேஜியில் ரித்தீஷுடன் நடித்தீர்கள், அவரும் இறந்துவிட்டார். உங்களுடன் நடிப்பவர்களுக்கு கெட்ட சகுனமா என்று அந்த ரசிகர் ப்ரியா ஆனந்தை கேட்டிருந்தார். கைது செய்து உள்ளே தள்ள வேண்டிய கேள்வி. ஆனால், ப்ரியா ஆனந்த் பொறுமையாக அந்த ரசிகருக்கு பதிலளித்தார்.


“பொதுவாக இதுபோன்ற நபர்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. உங்கள் கருத்து ஒருவரது மனதை எந்தளவு புண்படுத்தும் என்பதை நீங்கள் உணர வேண்டும். நான் பதிலுக்கு உங்களை திட்டுவதில், அவமானப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று கூறியிருந்தார்.


ப்ரியா ஆனந்தின் குணமான இந்த பதில் அந்த ரசிகரை யோசிக்க வைத்திருக்க வேண்டும். “என் வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.


இந்தியாவில் சக மனிதர்கள் மீதான வெறுப்பு பெரும் நெருப்பாக  வளர்ந்துவரும் நிலையில், ப்ரியா ஆனந்தின் பொறுமையும், கண்ணியமான பதிலும்  ஆறுதல் அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here