கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியன்று, அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டியின் மீது தீ வைக்கப்பட்டது. இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதியன்று தீர்ப்பு அளித்தது. அதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேரை விடுவித்தும், 31 பேரை குற்றவாளியாக அறிவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 11 பேருக்கு மரண தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

gujarathighcourt-main1

இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தநிலையில், திங்கட்கிழமை (இன்று) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ’இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் மூர்க்கத்தனமாக குறுக்கிடும் போக்காக இது அமைந்துள்ளது’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்