குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விருப்பமான உணவாக இந்த பரோட்டா முதலிடம் பிடிக்கிறது. மைதா மாவில் செய்யும் பரோட்டா குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்
மென்று சாப்பிட கஷ்டமாக இருக்கும். இதில் நிறைய எண்ணெய் ஊற்றிச் செய்வார்கள்
எளிதில் ஜீரணமாகாது.

ஆனால், கோதுமை மாவில் செய்யும் பரோட்டா அப்படி இல்லை. நிறைய எண்ணெய் தேவையில்லை. மைதா மாவில் செய்தால்தான் தனித்தனி இதழாக வரும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கோதுமை மாவிலும் நன்றாக வரும். நான் வீட்டில் அடிக்கடி செய்வதால் உங்களுக்கு இதை எழுதுகிறேன். நீங்கள் நிச்சயம் செய்துப் பார்க்கவும்.

தேவையானப் பொருட்கள்

கோதுமை மாவு – 2 கிண்ணம்
அரிசி மாவு – கால் கிண்ணம்
உப்பு – 1 மேசை கரண்டி
தண்ணீர் – மாவு பிசைய தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

முதலில் கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசையவும். சிறிது மாவு எடுத்து சப்பாத்தி போல் பரத்தவும். அதன் மேல் கால் தேக்கரண்டி, எண்ணெய் கால் தேக்கரண்டி அரிசி மாவு தூவவும். அதை விரலால் நன்றாக தடவவும். அதன் பின் விசிறி போல் மடிக்கவும் அப்படியே சுருட்டி சப்பாத்தி போல் இடவும். மிகவும் அழுத்திப் போட வேண்டாம். பின்பு கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும் இதற்கு முட்டை கறி, காய்கறிகள் போட்டு செய்த குருமா நன்றாக இருக்கும்.

செய்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று மறக்காமல் எழுதுங்கள்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here