கோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடை வெப்பத்தின் உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க,  கோடைக்கேற்ற குளு குளு பானம். சுவைத்து மகிழுங்கள். 

நன்னாரி லெமன் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 5 டம்ளர்நன்னாரி எசன்ஸ் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 1 டம்ளர் தேக்கரண்டி லெமன்  – இரண்டு பழம் 

உப்பு – 1 சிட்டிக்கை 

புதினா –  அலங்கரிக்க

செய்முறை:

லெமனை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும்.

சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும்.

அதில் நன்னாரி எசன்ஸை சேர்த்து ப்ரஷ் புதினா இலையை சேர்த்து ஃபிரிட்ஜில் 3 மணிநேரம் வைக்கவும். புதினா மணம் கமழ குடித்து மகிழங்கள் நன்னாரி லெமன் சர்பத்.

வெயிலில் சென்று வந்த களைப்பும் தீரும். உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் லெமன் சர்க்கரை உப்பு. நான்கு புதினா இலைகள் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும். கோடைக்கேற்ற குளு குளு பானம் தயார்.