கொவைட்-19 எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க: பாம்பு நடனம் பாருங்க

"A cosy corner in a golf course becomes a dance floor. Gracious, synchronised swirling and twirling! Beauty is nature," wrote a user while sharing the clip.

0
1139

பெங்களூருவைச் சேர்ந்த வசுதா வர்மா என்பவரால் டிவிட்டர் தளத்தில் பகிரப்பட்ட இரண்டு பாம்புகள் நடனம் ஆடும் வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த வீடியோ கோல்ஃப் கோர்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்டதாகத் அவர் தெரிவித்துள்ளார். 36 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், இரண்டு ரேட் வகைப் பாம்புகள், பின்னிப் பிணைந்து நடனம் ஆடுவது போலத் தெரிகிறது. 

இந்த வீடியோவைப் பகிர்ந்த வர்மா, “கோல்ஃப் கோர்ஸில் புதர் மண்டியுள்ள ஓர் இடம் இரு பாம்புகளுக்கு நடனமாடும் இடமாக மாறியுள்ளது. வளைந்து நெளிந்து பாம்புகள் ஆடுகின்றன. இயற்கையில்தான் எத்தனை அழகு,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுடன் பல இந்திய வனத் துறை அதிகாரிகளையும் வர்மா, டேக் செய்துள்ளார். 

இந்த வீடியோ,6,000 முறை பார்க்கப்பட்டதுடன் பலரும் தமதுகருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவில் டான்ஸ் ஆடும் பாம்புகள், நாகப் பாம்பு என்று சிலர் சொன்னார்கள். அதை மறுத்த இந்திய வனத் துறை அதிகாரி ஒருவர், வீடியோவில் தெரிவது ரேட் வகைப் பாம்புகள்தான் என்றும் நாகப் பாம்பு இல்லையென்றும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இரு பாம்புகள் இந்த நடனம் ‘மேட்டிங்’ எனப்படும் உறவு வைத்துக் கொள்வதர்காக என்று சில டிவிட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தெளிவுபடுத்திய Smithsonian மேகஸீன், இரு பாம்புகள் இப்படி வளைந்து நெளிந்து காணப்படுவது, உறவு வைத்துக் கொள்வதாக மட்டும் என்று எடுத்துக் கொள்ளமுடியாது. இரு ஆண் ரேட் பாம்புகள் கூட இப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபடும். தங்களில் யார் பெரியவர் என்பதைக் காட்டிக் கொள்ளக் கூட இப்படிப்பட்ட ‘நடனத்தில்’ பாம்புகள் ஈடுபடலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here