நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார். நாம் கொள்யைர்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இதில் பேசிய ஹர்திக் பட்டேல், “நாம் அனைவரும் இங்கு தேசத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காக ஒன்று கூடியுள்ளோம். அன்று சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். இன்று நாம் அனைவரும் கொள்ளையர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
மம்தா பானர்ஜி பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் லட்சோப லட்ச மக்களையும் ஒன்றிணைத்துள்ளார். இது பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய செயல். இங்கே குழுமியிருக்கும் கூட்டம் பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துகொண்டிருப்பதற்கான அடையாளம்” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஒரே மேடைக்கு மம்தா பானர்ஜி கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆட்சியில் இருந்து பாஜக அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் நமக்கு சொல்கிறது.

குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி இந்திய அரசியலில் கவனம் ஈர்த்தவர் ஹர்திக் பட்டேல் .

இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் யாதவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடு , அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here