நீண்டஇடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனிக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. கொலைகாரன் படத்தைதான் சொல்கிறோம். அத்துடன், தயாரிப்பாளராகவும், விநியோகிஸ்தராகவும் தொடர் தோல்விகளை சந்தித்த பாஃப்டா தனஞ்செயனுக்கும் இந்தப் படம் ஆறுதளித்துள்ளது.

பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் அரைடஜன் தோல்விப்படங்கள் வந்தன. அந்த சரிவை கொலைகாரனின் வெற்றி தாங்கி நிறுத்தியுள்ளது. கில்லர் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து கொலைகாரனை வெளியிட்டனர். அங்கும் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமௌலி படங்களில் கோட்டைவிட்ட தனஞ்செயன்தான் இந்தப் படத்தை விநியோகித்தது. படம் பெத்த லாபத்தை சம்பாதித்து தந்திருக்கிறது. அப்புறமென்ன… கேக் எடு கொண்டாடுதானே.

படத்தின் வெற்றியை விஜய் ஆண்டனி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தனஞ்செயன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here