கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது : பெண் விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்

Chinese virologist Dr Li-Meng Yan has claimed that the novel coronavirus was made in a government controlled laboratory in Wuhan and asserted that she has scientific proof to back the claim.

0
611

கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். இந்த வைரஸ், சீனாவில் உள்ள ஆய்வகத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது எனவும், வேண்டுமென்றே சீனா பரவவிட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அதற்கு சீனா தரப்பில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவை சேர்ந்த வைராலஜிஸ்ட்டான டாக்டர் லி-மெங் யான் அளித்துள்ள வீடியோ பேட்டியில், வுஹானில் உள்ள அரசு ஆய்வகத்தில் கொரோனா தொற்று கிருமி தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது. கொரோனா பதிவாகியபோது உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் எனது எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இந்த வைரஸ் இயற்கையிலிருந்து வந்ததல்ல. உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் சில விஞ்ஞானிகள் மூலமாக இது தயாரிக்கப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

SARS CoV-2 ஒரு உயர் விகாரி வைரஸ். இதை யாரும் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆபத்து குறித்து உலகிற்கு தெரியப்படுத்த முயற்சிக்கையில், சீன அதிகாரிகள் தன்னை மிரட்டியதால், அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

என்னைப் பற்றி வதந்திகளை பரப்புவதற்கும், எனது அனைத்து தகவல்களையும் நீக்குவதற்கும் சீன அதிகாரிகளை நியமித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

யானின் இந்த குற்றச்சாட்டிற்கு இதுவரையில் சீனா தரப்பில் பதில் வரவில்லை. தனது பாதுகாப்பிற்காக அவர், சீனாவில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here