கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஐ.எஸ் பயங்கரவாத குழு, அல்-கொய்தா மற்றும் அதன் துணை அமைப்புகள் போன்றவற்றிற்கு பையோ டெரரிஸம் போன்ற வாய்ப்புகளை வழங்குவதாக ஐ.நா தலைவர் அந்தோனியோ குடரெஸ் எச்சரித்துள்ளார்.ஐ.நா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு வாரம் ஜூலை 6 முதல் 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

விர்ச்சுவல் முறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐ.நா தலைவர் மற்றும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ‘கொரோனாவுக்கு பிந்தைய உலகம் – பலதரப்பு ஒத்துழைப்பின் நன்மைகள்’ என்ற தலைப்பில் இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் ஐ.நா தலைவர் அந்தோனியோ குடரெஸ் பேசியதாவது:பயங்கரவாதத்தின் மீதான கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் தாக்கங்களை முழுமையாக மதிப்பிட வேண்டும். 

இந்த குழுக்கள் அனைத்தும் உள்ளூர் மோதல்கள், ஆளும் அரசின் தோல்விகள் மற்றும் பிற குறைகளை தங்கள் நோக்கங்களுக்கு பயன்படுத்த முற்படுகின்றன.ஒரு காலத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் பரந்த அளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாத குழு, தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயங்கரவாதிகள் போராடுகின்றனர்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், சைபர் தாக்குதல்கள் மற்றும் உயிர் பயங்கரவாதம் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தின் பாதிப்புகளையும் இந்த தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது. பயங்கரவாதிகளின் குறியில் ஆன்லைன் மாணவர்கள்நிர்வாக இயக்குநர் குழு அளித்துள்ள அறிக்கையில், நூறு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் உட்பட உலகளாவிய மக்கள் இணையத்தில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

மேற்பார்வை இல்லாத இணைய பயன்பாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேமிங் தளங்களில் இயங்கும் அதிக எண்ணிக்கையிலான மக்களை பயங்கரவாத குழுக்கள் தங்கள் கருத்தை திணித்து மூளைச் சலவை செய்ய ஒரு வாய்ப்பாக உள்ளது. சைபர் குற்றங்கள் உயர்வது பயங்கரவாதிகள் மற்றும் கிரிமினல்கள் இடையே இணைப்பு அதிகரிக்கவும் வழிவகுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here