கொரோனா வைரஸ்: நேற்றைய(மே 22) முக்கிய செய்திகள்

The numbers: More than 5.2 million cases of Covid-19 have been reported worldwide, including over 337,000 deaths, according to Johns Hopkins University. The US makes up more than 1.6 million of those cases.

0
56
  • எகிப்து அரசு, கொரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள்கட்டமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஓராண்டிற்கு எகிப்து குடிமக்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு சதவீதமும், ஓய்வூதியத்தில் இருந்து அரை சதவீதமும் கழிக்கப்படும்.
  • வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வருபவர்கள், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் 1,000 பவுண்ட் அபராதம் விதிக்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும், விமானம் அல்லது ரயிலில் வரும் பயணிகள், எங்கே தனிமையில் இருக்கப் போகிறார்கள் என்ற தகவல்களை எல்லை பாதுகாப்பு படையினரிடம் வழங்கவேண்டும். இல்லையென்றால் அரசு ஒதுக்கும் இடத்தில் தங்க வேண்டும்.
  • தெற்கு சூடானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பணிக்குழுவை சேர்ந்தசு காதாரத்துறை அமைச்சர் தவிர்த்து அந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்த மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்தநாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மைக்கேல் மக்குய் தெரிவித்துள்ளார்.
  • இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் எதிர் வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் தேதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை(23) இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் நாடு தழுவிய ஊரடங்கு, எதிர்வரும் செவ்வாய்கிழமை(26) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தின் காப்புரிமை பெறப்படாத வகையை (Generic version) உலகில் முதன் முதலில் உருவாக்கியுள்ளதாக வங்கதேசத்தை சேர்ந்த பெக்சிம்கோ மருந்து நிறுவனம் கூறியுள்ளது.
  • இந்தியாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்யும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இது நான்காவது முறை.
  • இந்தியாவில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை)  மதியம் முதல் விமான பயணச்சீட்டுகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here