நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் இந்த வருடம் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் உரையாற்றுவதும், பல முக்கிய பிரமுகர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்பதும் கடந்த வருடம் வரை நடந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்த ஆண்டு குழந்தைகள் பங்கேற்க அனுமதி இல்லை.

இதில் தேசிய மாணவர் படையினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரதமர் சுதந்திர தின நிகழ்ச்சியில் உரையாற்றும்பொழுது, 100 பேர் வரையே அனுமதிக்கப்படும்.

கடந்த ஆண்டு வரை, பிரதமர் உரையாற்றும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த வருடம் நிகழ்ச்சியில் பங்கேற்க வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் பிற பார்வையாளர்கள் என 20% பேருக்கே அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here