கொரோனா வைரஸ்: உலகளவில் 5 கோடி மக்களுக்கு கை கழுவும் வசதி இல்லை

0
571

இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையாக கை கழுவும் வசதி இல்லாததால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கும், பரப்புவதற்குமான அபாயம் அதிகமிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் வசதி கிடைக்காததால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், வளர்ந்த நாடுகளை விட கொரோனா தொற்றை பரப்ப அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் சுகாதார பார்வைகள் என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில், சகாரா ஆப்பிரிக்கா மற்றும் ஓசினியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு, முறையாக கைகழுவும் வசதி கிடைப்பதில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதில் கை கழுவுதல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் குறைந்த சுகாதார திறன் காரணமாக கைகழுவும் வசதி இன்றி இருப்பது கவலையளிக்கிறது.சுமார் 46 நாடுகளில் சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் இன்றி 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேஷியா நாடுகளில் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு கைகழுவும் வசதி இல்லாத சூழல் உள்ளது.

தற்காலிக தீர்வாக சானிடைசர் அல்லது தண்ணீர் லாரிகளை பயன்படுத்தலாம். ஆனால் மோசமான கை கழுவுதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க நீண்ட கால தீர்வுகளை செயல்படுத்த வேண்டுமென ஆய்வாளரான பிரவுர் கூறியுள்ளார்.

உலக மக்கள்தொகையில் 25 சதவீதத்தினர் பயனுள்ள கை கழுவுதல் வசதிகளை கொண்டிருக்கவில்லை என்றாலும், 1990 மற்றும் 2019க்கு இடையில் பல நாடுகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்த நாடுகளில் சவுதி அரேபியா, மொராக்கோ, நேபாளம் மற்றும் தான்சானியா ஆகியவை அடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் பள்ளிகள், பணியிடங்கள், மருத்துவமனை மற்றும் சந்தைகள் போன்ற வீடு அல்லாத பொது இடங்களில் உள்ள கை கழுவுதல் வசதிகளை மதிப்பிடவில்லை.

ஆப்பிரிக்காவில் 190,000 பேர் கொரோனா தொற்றால் இறக்கக்கூடும் என்றும், மொத்த மக்கள் தொகையான 1.3 பில்லியன் மக்களில், 44 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here