கொரோனா வைரஸ்: உறைந்த உணவு பேக்கேஜிங்கில் உருவாகக்கூடும்: சீனா எச்சரிக்கை

The Chinese Centre for Disease Control and Prevention statement did not mention the country from where the package was imported

0
76

சீனாவில் உறைந்த உணவு பேக்கேஜிங்கிலிருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையத்தின் அறிக்கையின்படி அசுத்தமான உறைந்துபோன உணவில் தொற்று ஏற்படுத்தக்கூடிய புதிய கொரோனா வைரஸ் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் 19 நாடுகளைச் சேர்ந்த 56 நிறுவனங்களிலிருந்து உறைந்த உணவு இறக்குமதிக்கு சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் அந்நிறுவனங்களின் ஊழியர்களில் பலர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எட்டு நோயாளிகள் உட்பட ஒன்பது பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிங்டாவோ நகரில்வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

புதிய தொற்றுக்கான காரணம் குறித்து சீன நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு செய்து வந்த நிலையில், உறைந்திருக்கும் உணவின் மேற்புறத்தில் புதிய கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது.

இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, உறைந்த உணவு வழியாக உயிருள்ள கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பரவமுடியும் என்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் நிகழ்வாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய அறிக்கைக்கு முன்னர், உறைந்த உணவு பேக்கேஜிங்கிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளில் கோவிட் -19 இன் மரபணு தடயங்களைசி.டி.சி கண்டறிந்தது. இருப்பினும், இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவு மிகக் குறைவாக இருந்தது. 

சீன சி.டி.சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங்டாவோவில் இரண்டு கப்பல் பணியாளர்கள் செப்டம்பர் மாதம் கோவிட் -19 நோயால் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த தொழிலாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கைக் கையாண்டுள்ளனர். 

இருப்பினும், கப்பல் பணியாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது வழக்கமான கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களா மற்றும் உணவு பேக்கேஜிங் மாசு படுத்தப்பட்டதா என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் உறைந்த உணவு பேக்கேஜிங் கையாளும் தொழிலாளர்களுக்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு சீன சி.டி.சி அறிவுறுத்தியுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here