ஒரே நாளில் 62,064 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது: இதுவரை 44,386 பேர் பலி.!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.15 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை  15.35 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 62,064 பேர்  கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில்,15,35,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 1007 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 44,386 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்  குணமடைந்தோர் விகிதம் 69.33% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.00% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை  பெறுபவர்கள் விகிதம் 28.66% ஆக குறைந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் நேற்று 12,248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,15,332 ஆகி உள்ளது. நேற்று  390 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,757 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,348 பேர் குணமடைந்து மொத்தம்  3,51,710 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,45,865 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் நேற்று 5,994 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது  இதில் நேற்று  119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,927 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6020 பேர் குணமடைந்து மொத்தம்  2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் நேற்று 1,300 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,427 ஆகி உள்ளது இதில் நேற்று  13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,111 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1225 பேர் குணமடைந்து மொத்தம்  1,30,587 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here