கொரோனா விதிமுறைகளை மீறல்: பிரபல திரையரங்கு மீது வழக்குப் பதிவு

0
65

கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சென்னை காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் பேச்சுக்கு இணங்க தமிழக முதல்வரும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து திரைப்படத்தை வெளியிடுமாறு தெரிவித்திருந்தார்.

அதேசமயம் தியேட்டர்களில் முதலில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. அதனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவே தற்போது நீடிக்கிறது.

தியேட்டர்கள், அரசு அறிவித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டதில், காசி தியேட்டரில் அரசு அனுமதித்த அளவை விட பார்வையாளர்களை அனுமதித்தது தெரியவந்தது.

சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான . பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து அளவுக்கதிகமான கூட்டம் கூட அனுமதித்ததாக 188, 269 ஆகிய பிரிவுகளில் தியேட்டர் நிர்வாகத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here