கொரோனா வார்டில் ‘டூபீஸ்’உடை : மாடல் ஆகும் செவிலியர்

Nurse Nadia faced disciplinary action at the hospital she worked at in Russia after photos emerged of her underwear showing underneath her transparent PPE

0
204

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில், ஒரு இளம் செவிலியர் கொரோனா வார்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரஷியாவில் வறுத்தெடுக்கும் கோடை வெயில்  காரணமாக அந்த இளம் செவிலியர் ‘டூபீஸ்’ உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் வார்டில் 

பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.

0-PAY-Tula-hot-nurse-1-east2west-news

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் செவிலியர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் அவர்களின் பணிபுரியும் தன்மைக்கு இணங்க செவிலியர்கள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது. அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

0-PAY-Nurse-Nadia-2-east2west-news

எது எப்படியோ, சர்ச்சைகள் ஒரு புறம் இருக்க, தற்போது  பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here