கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து விட்டார்களா என தெரிந்துக் கொள்வது எப்படி?

0
350

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 14 மாநிலங்களில் 115 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் உள்ளனர். 2 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், இந்தியாவுக்குள் வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 12 லட்சத்து 30 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வைரஸ் பாதித்த ஒருவர் நன்றாக குணம் அடைந்து விட்டாலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு 2 தடவை மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

24 மணி நேர இடைவெளியில் இந்த மருத்தவ பரிசோதனை செய்யப்படும். அந்த 2 மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதியானால் மட்டுமே ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் நோயாளி குணமடைந்துவிட்டது மார்பக எக்ஸ்ரே சோதனை மூலமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும் ஆஸ்பத்திரியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here