கொரோனாவிற்கான 3 புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உலகளவில் 1,02,67,539 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,04,779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரஸின் செயல்பாடுகள் குறித்த தெளிவான குறிப்புகள் இதுவரை கிடைக்காததால், ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. காய்ச்சல், சளி, வறட்டு இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், வாசனை தன்மை இழப்பு உள்ளிட்டவை இதுவரை கொரோனா அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூடுதலாக 3 அறிகுறிகளை தனது பட்டியலில் இணைத்துள்ளது. மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவைதான் அந்த புதிய அறிகுறிகள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் அந்த மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் தொற்று ஏற்பட்டவருக்கு 2-14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஒரு சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் என்றும், வயதானவர்கள் மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கட்டவர்களே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கொரோனா அறிகுறிகள் பட்டியலில் காய்ச்சல், இருமல், தசை வலி, தலைவலி, வாசனை தன்மை இழப்பு உள்ளிட்டவைகள் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here