கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்குள் உலகம் முழுவதும் 20 லட்சம் பேர் உயிரிழக்க கூடும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 150 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற நாடுகளும் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன. முதன்முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து கடந்த 9 மாதத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

—இதையும் படியுங்கள்

இந்நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான் தெரிவித்துள்ளார். 

 மேலும் அவர் கூறுகையில், ‘இது, தடுப்பூசி தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிக பெரிய சவால். வெற்றிகரமாக தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 20 லட்சம் உயிரிழப்புகளை எட்டக்கூடும். தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லையென்றால் இன்னும் அதிகமாக இருக்கலாம்,’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here