முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டிய சாதனை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்ற நிலையில் 100 கோடி தடுப்பூசி என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தியதில் முதல் 5 இடங்களில் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசி செலுத்தி உத்தரகண்ட் சாதனை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here