கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலையடுத்து தனது ஊழியர்கள் 10% பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், அதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறையாக இருப்பது விமான போக்குவரத்து துறை.

உள்ளூர் மற்றும் வெளிநாடு சேவை என அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதால் இத்துறையில் பணியாற்றிவந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம், சம்பளக்குறைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது போல தனது ஊழியர்களில் 10% பேரை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, இண்டிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ரோனோஜாய் தத்தா கூறுகையில்,
“கொரோனா காலத்திலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியத்தை உலகளவில் வழங்கிய நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று
.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க ஊதியக்குறைப்பு, ஊதியம் இல்லாத விடுப்பு என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் வருவாய் சரிவை சமாளிக்கும் வகையில் 10% ஆட் குறைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இண்டிகோ வரலாற்றில் முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தத்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here