கொரோனா அப்டேட்: தமிழகத்தில் படிப்படியாக குறையும் பாதிப்பு

0
133

தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 8,30,772 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 770 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 8,12,568 குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,264 ஆகஉயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 2; தனியார் மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 164 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் மொத்தம் 2,29,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,52,29,307 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,213 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 5,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 251 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 183.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here