கொரோனா அப்டேட்ஸ்: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழப்பு

Maharashtra confirmed nearly 3,000 fresh cases in last 24 hours, the highest single-day coronavirus infections in any state so far. Coronavirus claimed 140 lives on Friday, bringing the total number of deaths in India to 3,720.

0
46

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 125,101 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51,784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தொற்றால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1940 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 44582 ஆக உயர்ந்துளள்து.

கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1517 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 14753 பேருக்கும், குஜராத்தில் 13268 பேருக்கும், டெல்லியில் 12319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று(சனிக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here