கொரோனா அப்டேட்ஸ் : இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

Coronavirus Live India Updates: India case count breaches 15,000; death toll tops 500.

0
335

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1334 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்றால்  இதுவரை 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது. 365  பேர் குணமடைந்துள்ளனர்.

2ம் இடத்தில் உள்ள டெல்லியில் 1893 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். 72 பேர்  குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில்1372  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 365 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here