கொரோனா அப்டேட்ஸ்: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 23 பேர் மரணம்

The number of cases reported in India now stands at 13,387, of which 11,201 are active cases, according to the ministry of health.

0
262

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1007 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1749 பேர் குணமடைந்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 3205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் 1640 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 15 ஆக உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here