கொரோனா அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு

In Pakistan, millions of students returned to school on Tuesday with mandatory temperature checks and the use of masks after six-month long closure.

0
184

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிகள் திக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here