கொரோனா அச்சுறுத்தல்: சிங்கப்பூரில் ஊரடங்கு நீட்டிப்பு

Singapore will extend its partial lockdown for another 4 weeks until June 1 to “decisively” bring down coronavirus cases within the community and close more workplaces, with only the most essential services remaining open.

0
207

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

முன்னதாக கொரோனாபரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிஸெய்ன் லூங் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் பிரதமர் லீ, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, அத்தியாவசிய சேவைகள், முக்கிய பொருளாதார காரணிகளைத் தவிர்த்து அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் லீ எச்சரித்திருந்தார்.உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 24 லட்சமாக இருக்கும் நிலையில், இதுவரை உலகம்முழுவதும் 1.7 லட்சம்   பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here