கொரோனா அச்சுறுத்தல் : கை கழுவுதல் தான் சிறந்த வழி

"There are limits to how a mask can protect you from being infected and we've said the most important thing everyone can do is wash your hands, keep your hands away from your face, observe very precise hygiene," said WHO's emergencies director Mike Ryan.

0
343

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் . அதற்காக கைகளை நன்கு கழுவ வேண்டும்.

கொரோனா தொற்று கைகள் மூலம் மூச்சுக்குழல் வழியாக உடலுக்குள் நுழைந்துவிடும் என்பதால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும் என உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநர் மைக் ரியான் இது குறித்துப் பேசிய போது, “முகக் கவசங்களையும் கையுறைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதி அணிவது மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியாது. முகக் கவசங்கள் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவது, முகத்தில் கை படாமல் பார்த்துக் கொள்வது ஆகியவையே கொரோனா பரவலை தடுக்க உதவும். மருத்துவர்கள் அணிவதற்கு முகக்கவசங்கள் கிடைக்காத நிலை உள்ளது. கொரோனா பரவல் அதிகமாகும் போது இந்நிலை மேலும் மோசமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா வராமல் தடுக்க முகக் கவசங்கள் அணியுங்கள் என தாங்கள் அறிவறுத்தவே இல்லை என்றும் ஆனால் பாரிஸ் தெருக்களில் அதை அணிந்து செல்வோரை அதிகம் காண முடிவதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரேன் தெரிவித்தார்.

Prevention-Graphic

மேலும், அதேபோல் வெளியில் பயணம் செய்வோர் கைகளில் தேய்த்து பயன்படுத்தும் கிருமி நாசினியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here