கொரோனா அச்சுறுத்தல்: உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 17,138

0
128

உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 17,138 ஆக உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை மார்ச் 24,மாலை 4.30 மணி நிலவரப்படி 17,138 ஆக உள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில்6,077 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,92,148 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 1,02,844 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here