கொரோனா அச்சுறுத்தல் : உயிரிழப்பு 21,297ஆக உயர்வு

Health officials worldwide are working to contain cases of COVID-19, the disease caused by the new coronavirus that originated in China.

0
166

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471,794 ஆக அதிகரித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 21,297 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 114,703 ஆகும்.  

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 74 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 278 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 489 ஆகவும், உயிரிழப்பு
1,032 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 680 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 49 ஆயிரத்து 515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 27 ஆயிரத்து 017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2,077 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஃபிரான்ஸில் 25 ஆயிரத்து 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் கொரோனால் இந்தியாவில் 13 பேர் வரை பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here