கொரோனா அச்சுறுத்தல் : இது விடுமுறை அல்ல : சச்சின்

In a video message former Indian cricketer Sachin Tendulkar has urged fellow citizens to cooperate with government and doctors amid the coronavirus crisis.

0
82

உலகம் முழுவதும் மக்கள் உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் தமிழகம் உட்பட பல இடங்களில் ஊரடங்கை மீறியதாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விடுத்துள்ள  கோரிக்கையில், நமது அரசின் சுகாதாரத்துறை வல்லுநர்கள் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், துணிந்து வெளியே செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் நிறைய மக்கள் வெளியே செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தானும், தனது குடுமபத்தினரும் வீட்டில் இருப்பதாகவும், அடுத்த 21 நாட்களுக்கு வெளியே அடியெடுத்து வைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைவரும் தன்னை போன்றே இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வெளியே செல்ல இது விடுமுறை அல்ல எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here