கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தி கொரோனில் என்ற மருந்தை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிமுகம் செய்தது கடும் விமர்சனங்களையும் மத்திய அமைச்சகத்தின் கேள்விகளையும் எதிர்கொள்ள தற்போது, அதன் சி.இ.ஓ. நாங்கள் கரோனில் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சாரியா பாலகிருஷ்ணா, மற்றும் 4 பேர் மீது எஃப்.ஐ.ஆர். தொடரப்பட்டதையடுத்து அவர்கள் தங்கள் கூற்றை தற்போது மாற்றியுரைத்துள்ளனர்.

இது தொடர்பாக பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

கொரோனில் கொரோனாவைக் குணப்படுத்தும்,கட்டுப்படுத்தும் என்று நாங்கள் கூறவேயில்லை. அதாவது நாங்கள் மருந்துகள் தயாரித்துள்ளோம் அதை சோதனை அடிப்படையில் கொடுத்த போது கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்தியதைக் கண்டோம் என்று தெரிவித்தோம். இதில் எந்த விதக் குழப்பமும் இல்லை.

இந்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் கொடுத்த உரிமத்தின் படிதான் தயாரிக்கப்பட்டது.

துளசி கிலாய் அஸ்வகந்தாவை மேம்பட்ட மட்டத்தில் சேர்க்கையாகப் பயன்படுத்தி தயாரித்தோம், கிளினிக்கல் சோதனைகளில் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்ததில் குணமடைந்ததைக் கண்டோம்.

எங்களுக்கு எதிராக சதிவலைப் பின்னப்படுகிறது, ஆயுஷ் அமைச்சகம் எங்களை மீண்டும் கிளினிக்கல் மருத்துவச் சோதனை நடத்தக் கோரினால் நாங்கள் நடத்துவோம். எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு கூறினார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here