கொரோனாவுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி

PM Modi vaccine: PM Modi was the first beneficiary on March 1 as the second phase of nationwide vaccination against coronavirus began.

0
156

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்.

தொற்றை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி உள்ளது. தடுப்பூசியை எடுத்துக்கொள்வதற்கு தகுதியுடையவராக நீங்கள் இருந்தால், விரைவில் உங்களுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று  கூறியுள்ளார்.

டெல்லி எய்ம்ஸில் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் இரண்டு செவிலியர்கள் ஈடுபட்டனர். அவர்களில், புதுச்சேரியைச் சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா.

இதுகுறித்து நிஷா சர்மா கூறுகையில், கோவாக்சின் இரண்டாவது டோஸை வியாழக்கிழமை காலை டெல்லி எய்ம்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளேன். அவர் எங்களிடம் பேசினார். அவரைச் சந்தித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தியது எனக்கு ஒரு மறக்கமுடியாத தருணம் என்று நிஷா சர்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here