கொரோனாவிற்கு எதிராக போராட அப்பளம் : மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

Arjun Ram Meghwal, minister of state for heavy industries and parliamentary affairs, said after developing Covid-19 symptoms he was tested twice and found positive in the second report.

0
261

கொரோனாவைக் குணப்படுத்தும் என சில நாள்களுக்கு முன்பு அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஜல்சக்தி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியாகியது.

இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டாவது முறை அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மெக்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தியிருந்த அமைச்சர் மெக்வால், “கொரோனாவிற்கு எதிராக எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here