கொரோனா முதல் நிலையில் கடந்த ஆண்டு பல லட்ச உயிர்கள் பறிபோன நிலையில் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஒரு வார காலமாக ஒரு லட்சத்திற்கும் மேல் இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்துள்ளது.இந்த சூழலில் கொரோனா பாதிப்பால் காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த செய்தியில் காணலாம்.

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் உருவாகுகிறது . வைரஸ் தாக்கத்தால் காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வாசனை தெரியாமல் போகுதல் உள்ளிட்டவை கொரோனாவின் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு பிறகும் 40 சதவீதம் அளவுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இருப்பினும் இது நாளடைவில் சரியாகி விடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் தொண்டையில் புண், எரிச்சல், அடைப்பு, சதை வீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது . தலைவலி ,தொண்டை வறட்சி, குரல் சோர்வு ஆகியவைகள் முக்கிய பிரச்சனையாக கருத்தப்படுகிறது . இன்னும் சில நோயாளிகளுக்கு காது கேட்காமல் போவதுடன் மூளை நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்; கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதுடன், சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொற்றிலிருந்து தப்பிக்கும் எளிய வழிமுறைகள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here