கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 36.805 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது,இந்த திட்டத்தை கடந்த 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், இதற்காக தற்போது ரூ. 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.இதே போல் வடகிழக்கு பருவமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பெய்த கனமழையால் சேதம் அடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க 96 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here