கொண்டைக்கடலை வடை

Chickpea Masala Vada is a popular tea time snack. We all have made Masala Vada using chana dal. I always try some new versions and I came up with this Masala Vada using Chickpea. It is very tasty, deliciously crunchy on the outside and soft inside.

0
965

தேவையானவை:

கருப்பு அல்லதுவெள்ளை கொண்டைக்கடலை_ ஒருகப்
சின்ன வெங்காயம்_ நான்கைந்து
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
இஞ்சி_சிறிது
பூண்டிதழ்_2
பெருஞ்சீரகம்_கொஞ்சம்
பெருங்காயம்
கறிவேப்பிலை & கொத்துமல்லிஇலை
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவும்.

மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலையைப் எடுத்துக்கொண்டு, அதனுடன் மிளகாய்,இஞ்சி,பூண்டு,பெருஞ்சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல்,இரண்டுமூன்று தடவை மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி தள்ளிவிட்டு அரைக்கவும்.

ஒன்றிரண்டு கடலை அரைபடாமல் இருந்தால் கரண்டியால் நசுக்கி விட்டுக் கொள்ள‌வும்.

அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை & கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.

உப்பு,காரம் சரிபார்த்துக்கொள்ளவும். காரம் தேவையெனில்பச்சை மிளகாயைப்பொடியாக நறுக்கிசேர்த்துக் கொள்ள‌வும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here