கொடைக்கானலில் யுனிலிவர் விட்டுச்சென்ற பாதரசக் கழிவுகள்

0
292

பன்னாட்டு நிறுவனமான யுனிலிவர் தன்னை சுற்றுச்சூழலை மதிக்கும் நிறுவனம் என்று சொல்கிறது. கொடைக்கானலில் இந்த நிறுவனம் நடத்தி வந்த தெர்மோமீட்டர் ஆலை, பாதரசக் கழிவுகளை ஆலைக்கு அருகிலேயே கொட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியது பல ஆய்வுகளில் நிரூபணமானது.

2001 ஆம் ஆண்டில் மூடப்பட்ட ஆலை

மக்களின் போராட்டத்துக்குப் பின் 2001 ஆம் ஆண்டில் இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் 14 வருடங்களாகியும் கொட்டப்பட்ட பாதரசக் கழிவுகளை அறிவியல்பூர்வமாக அகற்றுவதற்கு யுனிலிவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிவாரணம் கோரும் மக்கள்

யுனிலிவர் கொட்டிய பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக சோஃபியா அஸ்ரஃப் பாடி வெளி வந்துள்ள “கொடைக்கானல் அடங்காது” என்ற பாடல் இரண்டு நாட்களில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்