கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் செவ்வாய்க்கிமை (இன்று) காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், கடந்த 1978ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்