கை நிறைய படத்துடன் திரும்பி வந்திட்டேன்னு சொல்லு…

0
314
Vimal

ஒருகாலத்தில் ஓடுகிறதோ இல்லையோ விமல் கையில் அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த வற்றாதச்சுனை சமீபமாக சுரக்கவில்லை. சொந்த காசில் மன்னர் வகையறா எடுத்தார். அதுவும் தோல்வி. இந்நிலையில் திடீரென மீண்டும் பிஸியாகியிருக்கிறhர் விமல்.

விமலை அறிமுகப்படுத்திய களவாணி இரண்டாம் பாகத்தை சற்குணம் எடுக்கிறார். விமல் நாயகன். தவிர கன்னிராசி என்ற படமும் விரைவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் வசந்தமணியின் இயக்கத்தில் ஒரு படம், ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர் அசோக் இயக்கத்தில் ஒரு படம், குறும்பட இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஒரு படம் என்று மூன்று பெயரிடப்படாத படங்களில் கமிட்டாகியுள்ளார். கூடுதலாக இரு படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

தேர்வு செய்து நடிக்கிறதுக்கு நாம ரஜினி, கமல் இல்லை. கிடைப்பது அனைத்திலும் நடிப்போம், அதிர்ஷ்டமிருந்தால் ஹிட்டாகும் என்ற மிடில்கிளாஸ் மனோபாவத்துக்கு விமல் வந்திருப்பதையே இந்த அமோக விளைச்சல் காட்டுகிறது. அறுவடையும் அப்படியே அமையட்டும்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: ’இதில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2வது இடம்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்