கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா – லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
129

சூர்யாவின் 37 வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். லைகா படத்தை தயாரிக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கே.வி.ஆனந்தின் கோ, அயன் படங்கள் ஹிட்டாயின. ஆனால் அடுத்து அவர் இயக்கிய மாற்றான், அனேகன் படங்கள் தோல்வியடைந்தன. கடைசியாக வெளியான கவண் படமும் சுமாராகவே போனது. ஒரு மாஸ் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் தனது ஆஸ்தான கதாசிரியர்கள் சுபாவை கைவிட்டு பட்டுக்கோட்டை பிரபாகருடன் இந்தமுறை கைகோர்த்திருக்கிறார்.

சூர்யா நடிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் கிரண்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அமிதாப்பச்சனை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

இதையும் படியுங்கள் : நீங்கள் குரங்கணி-கொழுக்குமலை பாதையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள் : சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்