கேழ்வரகு கூழ்

0
436

தேவையான பொருட்கள்: 

  • கேழ்வரகு மாவு – அரைகிலோ
  • நொய் (பச்சரிசி) – 200 கிராம்
  • சின்ன வெங்காயம் – 3  
  • தயிர் – இரண்டு கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர்சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்துமுந்தின நாள் புளிக்க வைக்கவும்.
  • மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்குதண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டுவேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்துவிட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.

இதனை இரவில் செய்து வைக்கவும்.

காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.

இந்ந கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்.

இந்தக் கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here