கேள்வி கேட்பவர்களை ‘தேச துரோகி’ என்று ஏன் அழைக்கிறது பாஜக; மீண்டும் மக்களவையில் கர்ஜித்த மஹுவா மொய்த்ரா (video)

0
482

ஆளும் பாஜக அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அல்லது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் அவர்களை தேச துரோகி என்று பாஜக ஏன்  அழைக்கிறது? என்று மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். 

காஷ்மீர் பிரச்னையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு மறுப்புத் தெரிவித்தது. 

இது குறித்த விவாதங்கள் மக்களவையில் நடந்துக் கொண்டிருக்கிறது . காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பிரதமர் மோடி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்துக் கொண்ட போது மத்தியஸ்தம் குறித்து பேசவே இல்லை என்று விளக்கமளித்தார்.

மேலும் தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்  மசோதா தாக்கல் செய்தது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினார்கள் . இது குறித்து பேசிய எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதா தகவல் அறியும் சட்டத்தை இல்லாமல் ஆக்க செய்யும் முயற்சி என்றது .   இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. 

பகுஜன்  சமாஜ் கட்சியும் தகவல் அறியும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனமாக்கும் என்றும் , சட்டத்தின் வெளிப்படைத்தன்மையை நீர்த்து போக செய்யும் என்றும் திருத்தம் என்பது அச்சட்டத்தின் மீதான வெளிப்படையான தாக்குதல் இது  என்றும் அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது .  

 இதனைத் தொடர்ந்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 குறித்து  பேசினார். 

பிரச்சாரத்துக்காகவே இயங்கும் அரசு , எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசும் குழுக்களை வைத்திருக்கும்  பாஜக என்று குற்றம்சாட்டினார். பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்பவரை ஏன் இந்த அரசு தேச துரோகியாக கருதுகிறது  என்று கேள்வி எழுப்பினார்.  தேச பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் ஒவ்வொரு முறை கேள்வி எழுப்பும் போது எங்களை தேசத் துரோகி, தீவிரவாதிகளிடம் இரக்கம் காட்டுவோர், மதசார்பற்றவர்கள் என்று 24 மணி நேரமும் வேலை செய்யும் அரசாங்கத்தின் குழுக்கள் எங்களை  ஏன் குறை கூறி வருகிறது என்றார். 

இதனை மறுத்த அரசு மஹூவா மொய்த்ராவின் குற்றச்சாட்டை திரும்பப்பெற கேட்டுக் கொண்டது . அதற்கு பதிலளித்த மஹூவா மொய்த்ரா நான் கூறிய குற்றச்சாட்டை திரும்ப பெற மாட்டேன். ஆளும் அரசுக்கு எதிராக கருத்து கூறும் ஒருவர் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கலாம் அவர்களின் பிரதிநிதியாகவே நான் இங்கு பேசுகிறேன்.  சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019  மூலம் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here