கேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

0
218

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டாப்-எண்ட் கேலக்ஸி ஏ80 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நியூ இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 3D டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.

3D கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் டூயல் சிம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இத்துடன் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டிருக்கிறது. 

சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 47,990 க்குக் கிடைக்கும். இதன் முன்பதிவு ஜூலை 22 ஆம் தேதி ஆரம்பித்து ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை இ-ஷாப், சாம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here