கூடுதல் சலுகைகளுடன் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் முன்பதிவு துவங்கியது

Samsung Galaxy S21 series pre-registrations are live in India.

0
368

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி அன்பேக்டு 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக், கேலக்ஸி பட்ஸ்லைவ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.

அதேபோல், கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை முன்பதிவு செய்வோருக்கு ஸ்மார்ட் டேக் மற்றும் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்21 பிளஸ் போன்ற மாடல்கள் பற்றி சாம்சங் தளத்தில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல் கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்வோருக்கு கவர் இலவசமாக வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்21 முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.2  ஆயிரம் மதிப்புள்ள விஐபி பாஸ் வாங்க வேண்டும். இவர்களுக்கு கேலக்ஸி எஸ்21 வினியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும். பின் ஸ்மார்ட்போன் வாங்கும் போது விஐபி பாஸ் பெற செலுத்திய ரூ. 2 ஆயிரம் கழிக்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3849 மதிப்புள்ள போன் கவர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here